இலங்கைக்கு தோல்வி – இந்தியாவுக்கும் வெற்றியில்லை

343 0

SL6இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி நேற்று தம்புள்ளை ரன்கிரி மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த போட்டியில் அவுஸ்ரேலிய அணி 2 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதன்படி இலங்கை 49.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 226 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்த அவுஸ்திரேலிய அணி 46 ஓவர்கள் நிறைவில் வெற்றியிலக்கை அடைந்தது.

இதேவேளை, இலங்கை அணியின் வீரர் திலக்கரத்ன தில்ஷான், இந்த போட்டியுடன், ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20க்கு 20 போட்டி வெற்றித் தோல்வியற்ற நிலையில் நிறைவு பெற்றது.

நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.4 ஓவர்களின் சகல விக்கட்டுக்களையும் இழந்து 143 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பாட களமிறங்கிய இந்திய அணி 2 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 15 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் மழை குறுப்பிட்டது.

தொடர்ந்தும் மழை பெய்த நிலையில் போட்டியை தொடரமுடியாத நிலையில், வெற்றி தோல்வியற்ற நிலையில் போட்டி நிறைவு பெற்றது.

எனினும் இரண்டு போட்டிகளை கொண்ட இந்த தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.