விக்டோரியா நீர்த்தேக்கம் புனரமைப்பு

294 0
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டை 30 வருடங்களுக்குப் பின்னர் புனரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கத்தின் மின் உற்பத்தி கட்டமைப்பு, வான் கட்டமைப்பு மற்றும் மின்விசை கட்டமைப்பு என்பனவற்றின் செயல் திறன் குறைவடைந்த நிலையில் இந்த புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புனர் நிர்மாண திட்டத்திற்கு அமைய நீர்த்தேக்கத்தின் அடித்தளம் மற்றும் அணைக்கட்டமைப்பு என்பன ஆய்விற்கு உட்படுத்தப்படவுள்ளதாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் எவ்.ஆர்.கே. அருப்பல குறிப்பிட்டுள்ளார்.விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டமைப்பு 120 மீட்டர் உயரத்தை கொண்டமைந்துள்ளதுடன், அதன் அகலம் 500 மீட்டராகவும் அமைந்துள்ளது.

Leave a comment