தலைவர் யாரோ அவர் பின்னே தாம் – நிமால்

302 0

Nimal_CIமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்காமல் இருந்திருந்தால் தாம் தொடர்ந்தும் மகிந்தவுடனேயே இணைந்திருக்க வேண்டி இருந்திருக்கும் என அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மைத்திரிபால சிறிசேன அல்லாது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு மற்றுமொறு தலைவர் வருவாரானால் அவருடனேயே தாம் இணைந்திருக்க போவதாக அவர் குறிப்பிட்டார்.

பதுளையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுந்திர கட்சியை பிளவுப்படுத்த பலர் முயற்சிக்கின்றனர்.

எனவே சுந்திர கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியதன் அவசியம் உணரப்படவேண்டும்.

ஸ்ரீ லங்கா சுந்திர கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் அனைவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனேயே ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா குறிப்பிட்டார்.