மைத்திரி கையூட்டல் கோரிய செய்தி – மேலதிக தகவல்களை கோரும் ஜனாதிபதி செயலகம்

38 0

pracidentஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கையூட்டல் கோரியதாக வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில், ஜனாதிபதி செயலகம், மேலதிக தகவல்களை கோரியுள்ளது.

குறித்த செய்தியை வெளியிட்ட செய்தியாளர் நிக் மெக்கென்சியிடம் இந்த தகவல்கள் கோரப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மகாவலித்துறை அமைச்சராக இருந்தபோது திட்டம் ஒன்றின் ஒப்புதலுக்காக அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றிடம் 2.5மில்லியன் டொலர்களை மைத்திரிபால கோரியதாக குறித்த செய்தியில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இது தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என்றும் கையூட்டலிலும் ஊழல்களிலும் ஈடுபடுவதற்கு தமக்கு நேரம் இருக்கவில்லை என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டு;ள்ளார்.

இதனையடுத்து குறித்த செய்தியாளரை தொடர்புக்கொண்டுள்ள ஜனாதிபதி செயலகம், இந்த சம்பவத்தில் தொடர்புபட்ட ஏனையவர்களின் பெயர் விபரங்களையும் வழங்குமாறு கோரியுள்ளது.