எரிபொருள் தட்டுப்பாடு மன்னிக்க முடியாத குற்றம்- சரத் அமுனுகம

290 0

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன நிர்வாகம் தனது கடமையை செய்ய தவறியுள்ளது என எரிபொருள் பிரச்சினை தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் தலைவரும் விசேட திட்டங்கள் தொடர்பான அமைச்சருமான சரத் அமுனுகம குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.

ஒருதொகை எரிபொருளை பாதுகாப்புக்காக கையிருப்பில் வைக்காதமை மன்னிக்க முடியாத குற்றம். எரிபொருள்  பற்றாக்குறை ஏற்படும் சந்தர்ப்பத்தில் அதிக விலையில் குறுகிய காலத்தேவைக்கு எரிபொருள் கொள்வனவு செய்யப்படுகின்றது. இந்நிலை மிகவும் அரிதாகவே ஏற்படும்.

களஞ்சிய வசதியும் இருந்து, அதிகூடிய சம்பளத்துக்கு ஊழியர்களையும் வைத்துள்ள கூட்டுத்தாபனத்தில் இவ்வாறான ஒரு நிலைமை ஏற்படக் கூடாது. அவ்வாறு ஏற்படுவதாயின் அது ஊழியர்களின் சதி முயற்சியாகவே அமைய வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment