வரவு  செல­வுத் திட்­டத்தை பராட்டும் மகிந்த அம­ர­வீர!

438 0

அமைச்­சர் மங்­கள சம­ர­வீர இரண்டு பிர­தான கட்­சி­க­ளி­லும் செயற்­பட்­ட­வர். அவர் இரு கட்­சி­க­ளி­ன­தும் கொள்­கை­களை உள்­வாங்கி வரவு  செல­வுத் திட்­டத்தை தயா­ரித்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது. அவ­ரது வரவு  செல­வுத் திட்­ட­மும் மிகச் சிறப்­பா­னது. இவ்­வாறு ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் செய­ல­ரும், அமைச்­ச­ரு­மான மகிந்த அம­ர­வீர தெரி­வித்­தார்.

வரவு   செல­வுத் திட்­டம் மீதான விவா­தத்­தில் நேற்­று­முன்­தி­னம் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர தனது கன்னி வரவு   செல­வுத் திட்­டத்தை முன்­வைத்­தி ருக்­கின்­றார். இதில் பல பசு­மை­யான விட­யங்­க­ளுக்கு நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இது வர­வேற்­­கத்­தக்­க­வொரு விட­யம்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யா­னது தனது கொள்­கை­க­ளுக்கு உட்­பட்­ட­தா­க­வும் நாட்­டின் எதிர்­கா­லம் தொடர்­பா­க­வும் கவ­னம் செலுத்தி பல முன்­மொ­ழி­வு­க­ளைச் செய்­தி­ருந்­தோம். அது குறித்த தொகுப்­பொன்­றை­யும் நாம் நிதி அமைச்­ச­ரி­டம் கைய­ளித்­தி­ருந்­தோம்.

அந்த விட­யங்­கள் தொடர்­பாக நிதி அமைச்­சர் சிறப்­புக் கவ­னம் செலுத்­தி­யுள்­ள­மைக்கு எமது நன்­றி­கள். தொழில் வாய்ப்­புக்­களை உரு­வாக்­கு­தல், வாழ்க்­கைச் செல­வைக் குறைக்­கும் வகை­யில் உத­வி­கள் வழங்­கு­தல், பன்­னாட்டு முத­லீட்­டுக்­கான வாய்ப்­புக்­களை அதி­க­ரித்­தல் உள்­ளிட்ட சகல விட­யங்­கள் தொடர்­பா­க­வும் நாம் செய்த முன்­மொ­ழி­வு­கள் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன.

2018ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத் திட்­டத்­தை கன­வு­லக வரவு செல­வுத் திட்­டம் என்று விமர்­சித்­தார்­கள். அவ்­வாறு விமர்­சித்த மகிந்த அணி­யால் தற்­போது வரவு  செல­வுத் திட்­டம் குறித்து சரி­யான விமர்­ச­ னங்­களை வெளிப்­ப­டுத்த முடி­யா­துள்­ளது. இந்­தச் சபை­யில் அவ­தா­னிக்க முடி­கின்­றது.

வர­வு  செ­ல­வுத் திட்­டத்­தில் வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு காணி­களை வழங்கி இருப்­ப­தா­க­வும் இத­னால் நாட்­டுக்கு ஆபத்து ஏற்­ப­ட­வுள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கின்­றது. அது மட்­மன்றி அரச சொத்­துக்­கள் தனி­யார் மயப்­ப­டுத்­தப்­ப­டும் என்­றும் கூறப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு வெளி­யி­டப்­பட்ட அச்­சம் சம்­பந்­த­மாக நாம் அமைச்­ச­ர­வை­யில் ஆராய்ந்­தோம்.

எமது நாட்­டில் உள்ள இளை­ஞர்­க­ளுக்கு அதி­க­ள­வி­லான தொழில் வாய்ப்­புக்­களை உரு­வாக்­கும் தரப்­பி­ன­ருக்கு காணி­களை வழங்­கு­வது தவ­றா­காது. முறை­யின்றி வெளி­நாட்­ட­வ­ருக்கு காணி­களை வழங்­கு­வதை அனு­ம­திக்க முடி­யாது. அதற்கு நாம் ஒரு­போ­தும் அங்­கீ­கா­ரம் வழங்­கப் போவ­தில்லை என்­ப­தைப் பொறுப்­பு­டன் கூறு­கின்­றேன்.

தற்­போது அரச வளங்­கள் தனி­யார் மயப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. செவ­ன­கல சீனித் தொழிற்­சா­லையை வழங்­கப்­போ­வ­தாக இப்­போது அதி­க­ள­வில் பேசப்­ப­டு­கின்­றது. செவ­ன­கல சீனித் தொழிற்­சலை மட்­டு­மல்ல அர­சுக்­குச் சொந்­த­மான எந்­த­வொரு சொத்­துக்­க­ளை­யும் நாம் தனி­யா­ருக்கு விற்­பனை செய்­வதை அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை.

ஆனால் அரச தனி­யார்  கூட்டு முயற்­சி­கள் முறை­யா­க­வும் வெளிப்­ப­டை­யா­க­வும் முன்­னெ­டுக்­கப்­ப­டும் பட்­சத்­தில் அதற்கு நாம் ஆத­ர­வ­ளிப்­போம்  என்­றார்.

Leave a comment