காங்கிரஸ் கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
அமைச்சர் வெங்கயா நாயுடு இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக பிரஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியே தமது ஆட்சி காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்தது.
எனினும், தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பில் அரசியல் லாபத்திற்காக காங்கிரஸ் கட்சி போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.
இந்திய அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பிய காங்கிரஸ், சுமார் ஆயிரம் இந்திய படையினர் கொல்லப்படவும் காரணமாகவும் இருந்துள்ளதாகவும் வெங்கயா நாயுடு குற்றம் சுமத்தியுள்ளார்.

