இலங்கை தொடர்பான சர்வதேச மீளாய்வு மாநாடு 15 ஆம் திகதி

373 0

இலங்கை தொடர்பான சர்வதேச மீளாய்வு மனித உரிமை கணிப்பு ஒழுங்கு மாநாடு ஜெனீவாவில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஜெனீவா, பலேய்ஸ் டெஸ் நேஷன்சில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், இலங்கை சார்பாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் ஹர்ஷா டி சில்வா கலந்து கொள்வார்.

இலங்கை தொடர்பாக, புரூண்டி, கொரிய குடியரசு மற்றும் வெனசூவேலா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இணைப்பு தொடர்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமை பதிவுரு தொடர்பான விபரங்கள் சர்வதேச மீளாய்வு மனித உரிமை கணிப்பு ஒழுங்கு தரப்பினரால் மூன்றாவது முறையாக மதிப்பீடு செய்யப்படவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை உட்பட 14 நாடுகளின் விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment