உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் மிளகாய் போன்றவற்றை இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்துமாறு மெனிங் சந்தை வியாபாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.குறித்த உற்பத்திகள் உள்நாட்டில் இருந்து கிடைக்கின்ற நிலையில், அவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலம் பெரும் நெருக்கடி நிலை ஏற்படுவதாக சங்கத்தின் அமைப்பாளர் எச் எம் உபசேன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அரசாங்கம் தெளிவான தீர்மானம் ஒன்றை பெற்றுக்கொடுக்காதபட்சத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

