பான் கீ மூனின் இலங்கை விஜயம் – மஹிந்த கருத்து

307 0

downloadஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கை வருகின்றமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கருத்து வெளியிட்டுள்ளார்.

பெல்லன்வில விஹாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அவர் அது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

இதன்போது ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனின் இலங்கை விஜயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மஹிந்த ராஜபக்ஸ பதில் வழங்கினார்.

பான் கீ முனுக்கு இலங்கை வரமுடியும், அவர் எமது காலத்திலும் இலங்கைக்கு வந்திருந்தார்.
வித்தியாசம் என்னவென்றால், எமது காலத்தை போல் அல்ல தற்போதைய நிலமை.

தற்போது மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றவா என்பது குறித்து மக்கள் நன்கு அறிவார்கள் எனவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை வரவுள்ள அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹஅரசாங்கத் தரப்பு மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரை சந்திக்கவுள்ளார்.

அத்துடன், நிலையான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான முக்கிய உரை ஒன்றையும் அவர் நிகழ்த்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள அவர் அங்கு இடம்பெறும் மீள்குடியேற்ற பணிகளை ஆய்வு செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காலியில் நடைபெறவுள்ள இளைஞர் மறுசீரமைப்பு நிகழ்வுகளிலும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.