புத்தளம் முந்தல் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழ்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பஸ் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் இவரை ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று, புத்தளம் முந்தல் – 10ம் கட்டைப் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில், ஏழ்வர் உயிரிழந்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்துக்கு சாரதியின் கவனயீனமே காரணமாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

