கட்டிடங்களை அழிக்கும் இராணுவம்!-

351 0

கேப்பாப்பிலவு மக்களின் காணியின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், காணியிலுள்ள சலக கட்டுமானங்களையும் அழித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்களுக்கு வெறும் காணியை கொடுப்பதோடு, அதிலுள்ள சொத்துக்களை அனுபவித்து விடக்கூடாது என்ற நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை விடுவிக்கும் பகுதியிலிருந்து இராணுவ தளபாடங்கள் நந்திக்கடல் பகுதி நோக்கியும், வெளியிடங்களுக்கும் நகர்த்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதேவேளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் 111 ஏக்கர் காணியை கையளிப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment