கழிவு நீருடன் ஓர் நீர்த் தாங்கி வாகனத்துடன் சுகாதார உத்தியோகத்தர் மற்றும் பொலிசாரிடம் சிக்கினார்

356 0

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் யாழ்.நகரில் இயங்கும் யு.எஸ் விருந்தினர் விடுதியின் கழிவை அகற்றச் சென்ற உழவு இயந்திரம் புதையுண்ட நிலையில் சுகாதார உத்தியோகத்தர் மற்றும் பொலிசாரிடம் அகப்பட்டுக்கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் குறித்த கழிவினை ஏற்றிச் சென்ற கழுவு பவுசரை செம்மணிப்பகுதியில் உள்ள வயல் பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு முயன்றுள்ளார்.

அப்போது கோப்பாய் பிரதேச செயலாளர் நேரில் அவதானித்து சம்பவ இடத்தில் இருந்து பொலிசார் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களிற்கும் தெரியப்படுத்தப்பட்டது.

Leave a comment