வாள்களுடன் வந்த கும்பல் வீடொன்றுக்குள் அட்டூழியம்

349 0

யாழ்ப்பாணம், அரியாலை புங்கங்குளம் சந்திக்கு அருகில்-புரூடி வீதியிலுள்ள வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்த கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்துடைத்ததுடன், பெற்றோல் ஊற்றி தீமீட்டியுமுள்ளனர்.

அத்துடன் மகன் எங்கோ என மிரட்டி வயோதிபர் ஒருவரையும் தாக்கிவிட்டு அந்தக் கும்பல் தப்பித்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. “4 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் எனது மகன் எங்கே? என மிரட்டி என்னைத் தாக்கினர். மகன் இல்லை என்றதும் வீட்டிலிருந்த பொருள்களை உடைத்து நாசம் செய்தனர். பெற்றோலும் ஊற்றி பெறுமதியான செற்றியை கொழுத்திவிட்டனர்” என தாக்குதலுக்குள்ளான வயோதிபர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Leave a comment