முல்லை விடியல்” மாபெரும் தொழில் மற்றும் உயர்கல்விச்சந்தை

361 0
முல்லைத்தீவு மாவட்ட செயலகம், பெரெண்டினாநிறுவனம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வேல்ட் விசன் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள “முல்லைவிடியல்” மாபெரும் தொழில் மற்றும் உயர்கல்விச்சந்தை  04.11.2017 –சனிக்கிழமை காலை 09.00 மணிமுதல் பி.ப 01.00 மணிவரை ஒட்டுச்சுட்டான் மகா வித்தியாலயத்தில்நடைபெற்றுள்ளது
இதில் 700ற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டு பயனடைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய்மா ந்தைகிழக்கு ஒட்டு சுட்டான்க ரைதுறைப்பற்று புதுக் குடியிருப்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகள் இதில் பயனடைந்துள்ளார்கள்.
நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முல்லைத்தீவு மாவட்ட உதவிப்பணிப்பாளர் சறோஜா குகனேசதாசன்,ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை முதல்வர்,கிராமசேவர்கள் என பலர் கலந்துகொண்டு நிகழ்வினை தொடக்கிவைத்துள்ளார்கள். இதில் கலந்துகொண்ட மாவட்ட மாணவர்களுக்கு பேருந்து சேவைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a comment