மணியம்தோட்டம் இளைஞனின் படுகொலையுடன் தொடர்புடைய விசேட அதிரடிப்படை புலனாய்வாளர்கள் இருவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவித்தே அனுராதபுரம் சிறைச்சாலைக்கு அவர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என தெரிய வருகின்றது.

