யாழில் பருவ மழைகாரணமாக 67 குடும்பங்கள் இடம்பெயர்வு

365 0

யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் பருவ மழைகாரணமாக நேற்றைய தினம் 67 குடும்பங்கள் இடம்பெயர்ந்து இடைத் தங்கல் முகாமில் வசித்து வருவதாக மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மாவட்டச் செயலக அதிகாரி மேலும் தகவல் தெரிவிக்கையில் ,

யாழ்ப்பாணக் குடாநாட்டில் கடந்த 5 நாட்களாக தொடரும் மழையுடன் கூடிய காலநிலையால் குடாநாட்டின் சகல பகுதிகளிலும் அதிக மழை பொழிந்தவண்ணம் உள்ளது.்இதனால் தாள் நிலப் பிரதேசங்கள் மட்டுமன்றி அனைத்து நீர. நிலைகளிலும் நீர் வேகமாக நிரம்பிவருகின்றது.

இதேநேரம் வலி வடக்குப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து பருத்தித்துறைப் பகுதியில் வசிக்கும் குடும்பங்களில் 67 குடும்பங்களைச் சேர்ந்த 198பேர் நலன் புரி முகாமில் இருந்தும் இடம்பெயர்ந்து அயலில் உள்ள பாடசாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக குறித்த மக்களின் உடனடித் தேவைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகின்றது. இதேநேரம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மழை வீழ்ச்சி தொடருமானால் மேலும் பல பகுதிகள் பாதிப்படையக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. என்றார்.

Leave a comment