மஹரகம பிரதேசத்தில் போதைப்பொருள் விநியோகித்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக மஹரகம காவற்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபரிடமிருந்து 40 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த பெண்ணின் மூத்த சகோதிரியும் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டார் என தெரிவித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த பெண்ணை அப்பகுதியில் உள்ள ஹெரோயின் பாவனையாளர்கள், குடு ருஜினி என அழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான குறித்த பெண்ணை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, ஹொரவ்பொத்தானை பிரதேசத்தின் வௌ;வேறு இடங்களில் அனுமதிப்பத்திரமின்றி தேக்கு மரக்குற்றிகளை கடத்தி சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடம் இருந்து இரண்டு பாரவூர்திகளும் 150 தேக்கு மரக்குற்றிகளையும் காவற்துறையினர் நேற்று இரவு மீட்டுள்ளன.
காவற்துறையினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, ஹப்புத்தளையில் நேற்றைய தினம் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான தேக்கு மரங்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதியின்றி பாரவூர்தி ஒன்றில் அவற்றை அவர்கள் கடத்திச் சென்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

