சுனாமி ஒத்திகை

285 0

சுனாமி தொடர்பான ஒத்திகை நிகழ்வு ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் அதற்கான ஒத்திகை நிகழ்வுகள் ஆரம்பமாகும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் சரத் பிரேமலால் தெரிவித்துள்ளார்.

இந்த ஒத்திகை நிகழ்வுகள் ஒரு மணித்தியாலம் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

நவம்பர் 5ஆம் திகதி சுனாமி சமிக்ஞை ஒன்று விடுக்கப்பட உள்ளது.

அதவாது இவ்வாறான நிலைமையொன்று ஏற்படலாம் என்பதற்கான முன்னாயத்தமாகும்.

அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதே இந்த சுனாமி சமிக்ஞை என்பதில் அர்த்தப்படுத்தப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் கூறியுள்ளார்.

இதற்கமை எதிர்வரும் 5ஆம் திகதி பிற்பகல் 2.05 அளவில் சுனாமி குறித்த சமிக்ஞை ஒன்று விடுக்கப்படும்.

பின்னர் 2.20 அளவில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒன்று விடுக்கப்படும்.

சுனாமி நிலைமை ஒன்று ஏற்படலாம்.

அதனால், கரையோரங்களில் வாழும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதற்காக இந்த சுனாமி  முன்னெச்சரிக்கை விடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளுக்கு இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்படும்.

குறித்த முன்னெச்சரிக்கை மீளப்பெறப்பட்ட பின்னர், வெளியேற்றபட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களை மீண்டும் அந்த இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்

இதற்கான முன்னெச்சரிக்கை மீளப்பெறும் அறிவிப்பு 3.45 அளவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தும் உள்ளடங்கும் வகையில் குறித்த பணிகள் முன்னெடுக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் விளக்கமளித்துள்ளார்.

Leave a comment