மஹிந்த சபாநாயகரிடம் முறைப்பாடு

352 0

சபாநாயகரிடம் முறையிட்டே நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்ற தாம் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் உரையாற்ற எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது, உரையாற்ற வாய்ப்பு கிடைக்காத நிலையில், சபாநாயகரிடம் முறையிட்டே அந்த வாய்ப்பை பெற்றுக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதம் இடம்பெறுகின்றது.

இது சமூகத்தில் உள்ள எந்தவொரு தரப்பினரும் கோரிய ஒன்றல்ல என அவர் கூறியுள்ளார்.

அரசியலமைப்பு உருவாக்க சபையொன்றை அமைக்க வேண்டுமாயின் அதற்கு மக்களின் ஆணை கிடைக்க வேண்டும்.

எனினும், அந்த மக்கள் ஆணை இன்று இல்லை என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Leave a comment