ஐக்கிய தேசிய கட்சியின் தேவைக்கு அமையவே புதிய அரசியல் அமைப்பு-மகிந்தானந்த அலுத்கமகே

395 0
புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்த சட்டமூலம், ஐக்கிய தேசிய கட்சியின் தேவைப்பாடுகளுக்கு அமையவே முன்வைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, ஒன்றிணைந்த எதிர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலமானது ஜனாதிபதியினாலேயோ அல்லது ஏனைய தரப்பினரினாலேயோ மேற்கொள்ளப்படவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியினரின் தேவைப்பாடுகளுக்கமைய, ஐக்கிய தேசிய கட்சியினரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெளிவாக விளங்குகிறது.
எனவே இது தொடர்பில் நாடாளுமன்றில் விவாதிப்பது காலவிரயமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், வடக்கு மாகாண மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன.
எனவே வடக்குக்கு அதிகார பகிர்வை வழங்குவதை தமது தரப்பினர் எதிர்க்கவில்லை எனவும் மகிந்தானந்த அலுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த கால அனுபவங்கள் தற்பேதைய அரசியல் அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தும் அவசியத்தை வலியுறுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சபையில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என பலர் தெரிவித்துவந்துள்ள போதிலும் அது எவ்வாறான மாற்றம் என்பதில் பல குழப்பங்கள் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் தெரிவித்துள்ளார்.

Leave a comment