ஏக்கிய ராஜ்ய என்ற சிங்கள பததிற்கு ஒருமித்த நாடு என்ற தமிழ் பதத்தின் மொழி பெயர்ப்பு சரியானதாக இல்லாவிட்டால், உரிய மொழிபெயர்ப்பு குறித்து ஆராய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாத்தில் உரையாற்றியபோது, நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.
ஏக்கிய ராஜ்ய என்ற பதம் இந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது.
பிளவுபடாத – பிரிக்க முடியாத என்பதே ஏக்கிய ராஜய மற்றும் ஒருமித்த நாடு என்பன ஊடாக அர்த்தப்படுகிறது.
எனினும், ஒருமித்த நாடு என்ற தமிழ் மொழிப் பெயர்ப்பு சரியானதாக இல்லாவிட்டால், அதன் சரியான மொழிபெயர்ப்பு குறித்து ஆராய வேண்டும்.
ஆனால், அது இந்த எண்ணக்கருவை உள்ளடக்குவதாக அமைய வேண்டும் என ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் இலங்கை குடியரசு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் இலங்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பிரச்சினை இருக்குமாயின், இலங்கை குடியரசு என்றே அதனை மாற்றிக் கொள்ளலாம் எனத் தாம் பரிந்துரைப்பதாகவும் ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.

