பாகிஸ்தான் தம்பதிகள் கைது

314 0
மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான ஹெரோயின் தொகையொன்றுடன் பாகிஸ்தான் தம்பதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் வைத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தம்பதிகள் இன்று அதிகாலை 4.40 அளவில் பாகிஸ்தானிலிருந்து இலங்கை வந்துள்ளனர்.
அவர்களின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் குறித்து அவதானித்த, வானூர்தி நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர், அவர்களின் பயணப் பொதியை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது, குறித்த பயணப் பொதியிலிருந்து 2 கிலோ 766 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்; தெரிவித்துள்ளார்.

Leave a comment