அபிவிருத்தி அதிகார ​சபையின் தலைவர் ரொஷான் பிரியதர்ஷன இலங்கசிங்ஹ பதவி நீக்கம்!

362 0

வட மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார ​சபையின் தலைவர் ரொஷான் பிரியதர்ஷன இலங்கசிங்ஹ என்பவரை, அப்பதவியிலிருந்து உடனடியாக விலக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.

அப்பதவிக்கு தகுதியான ஒருவரை நியமிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடமத்திய மாகாண ஆளுநர் பி.பீ திசாநாயக்கவிடம் எழுத்துமூலமாக கோரியுள்ளார்.

அதிகார ​சபையின் தற்போதைய தலைவர் ரொஷான் பிரியதர்ஷன இலங்கசிங்ஹ, வடமத்திய மாகாண சபையின் நீர்வழங்கல் வீதி அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் சரத் இலங்கசிங்ஹவின் புதல்வராவார்.

ரொஷான் பிரியதர்ஷன இலங்கசிங்ஹ,அப்பதவிக்கு செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதியன்று நியமிக்கப்பட்டனர். அவர், தன்னுடைய கடமைகளை ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதியன்றே பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்தாகும்.

Leave a comment