ஹம்பாந்தொட்டை – பதகிரிய குளத்தில் பாரிய அளவில் மீன்கள் இறப்பு

317 0
ஹம்பாந்தொட்டை – பதகிரிய குளத்தில் பாரிய அளவில் மீன்கள் இறந்து மிதப்பதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.
மீன்கள் இறப்பதன் காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
 இதன்காரணமாக அந்த பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக பத்தகிரிய பிரதேச பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பிரச்சினை தொடர்பில்  ஹம்பாந்தொட்டை மாவட்ட செயலாளர் டப்ளிவ்.எச். கன்னங்கரவை தொடர்பு கொண்டு வினவியது.
 அதற்கு பதிலளித்த அவர், பதகிரிய குளத்தில் தற்போது புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
இதனால் குளத்தில் நீர் வற்றியுள்ளமையே மீன்கள் இறப்பதற்கான காரணம் என அவர் தெரிவித்தார்.

Leave a comment