பாடசாலை மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்க கல்வி அமைச்சர் நடவடிக்கை

336 0

அரச பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை நேரத்தில் ஒரு நேர உணவை வழங்க நடவடிக்கை எடுக்கப் போவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி நிறுவனத்தில் இன்று (26) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

கல்வி அமைச்சில் இடம்பெற்றுவந்த தேவையற்ற செலவுகள், முறையற்ற நிதிப் பயன்பாடுகள் என்பவற்றை நிறுத்தியுள்ளதனால், இந்த திட்டத்துக்கு தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ள முடியுமாகவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த திட்டம் தொடர்பிலான பிரேரனையை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுவரவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment