யக்கலமுல்ல செயலாளர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமையல் உபகரணங்கள் நுளம்பு வலைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பான நிகழ்வு யக்கலமுல்ல பிரதேச செயலாளர் அலுவலகத்தில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தன தலைமையில் நடைபெற்றது.
அமைச்சரின் தனிப்பட்ட முயற்சியின் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கியினூடாக 1790 இலட்சம் ரூபா நிதி 146 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து , கிராம உத்தியோகத்தர் மற்றும் அதனை சார்ந்த ஊழியர்களுக்கான அலுவலகம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பிரதேச செயலாளர் வளாகத்தில் இடம்பெற்றது.

