ரந்தீர் மீது நடவடிக்கை : பிர­தமர் ரணில் உத்­த­ரவு

266 0

திவு­லுப்­பிட்டி, ஹேன்­பிட்­ட­கெ­தர பகு­தியில் பொலிஸ் விசேட அதி­ரடிப் படை­யி­ன­ருக்கும் பாதாள உலக குழு­வொன்­றுக்கும் இடையில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட் டுச் சம்­ப­வத்தை அடுத்து கைது­செய்­யப்­பட்ட ஐக்­கிய தேசியக் கட்­சியின் மேல் மாகாண சபை உறுப்­பினர் ரந்தீர் ரொட்­றிக்கோ தொடர்பில் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு பிர­த­மரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாசி­முக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த உத்­த­ர­வினைப் பிறப்­பித்­துள்ளார். இந்த துப்­பாக்­கிச்­சூட்டுச் சம்­ப­வத்தில் பிர­பல பாதாள குழு உறுப்­பி­ன­ரான நாவ­லகே குஷான் தட்­சில குரே கொல்­லப்­பட்­டி­ருந்தார்.

சம்­ப­வத்தை அடுத்து மேல் மாகாண சபை உறுப்­பினர் ரந்தீர் மற்றும் அவ­ரது மனைவி உட்­பட எட்டுப் பேர் பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்­டி­ருந்­தனர். மேல் மாகாண சபை உறுப்­பி­னரின் வீட்­டி­லி­ருந்து 115 தோட்­டாக்­களும் குண்­டு­து­ளைக்­காத அங்கி, வெடி­பொ­ருட்கள், கைத்­துப்­பாக்கி வைக்­கப்­படும் கூடு, வாள் போன்ற பொருட்கள் மீட்­கப்­பட்­டி­ருந்­தன.

இந்த நிலையில் கைதான எட்டுப் பேரும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். இத­னை­ய­டுத்து மேல் மாகாண சபை உறுப்பினரான ரந்தீர் மீது உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a comment