அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்­திற்கு சவால் விடுக்கும் திஸா­நா­யக்க

1117 0

முடிந்தால் மூன்று நாட்­க­ளுக்கு மேலான பணிப்­ப­கிஷ்­க­ரிப்பு போராட்­டத்­தினை முன்­னெ­டுத்துக் காட்­டுங்கள் என அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்­திற்கு அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க சவால் விடுத்­துள்ளார்.

சர்­வ­தேச வெள்ளைப்­பி­ரம்பு தினத்­தினை முன்­னிட்டு பத்­த­ர­முல்­லவில் இடம்­பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

சைட்டம் மருத்­துவக் கல்­லூ­ரி­யா­னது சட்­டங்­க­ளுக்கு உட்­பட்ட வகை­யி­லேயே நிறு­வப்­பட்­டுள்­ளது. ஆகவே அந்­தக்­கல்­லூ­ரி­யா­னது மருத்­துவப் பட்­டங்­களை வழங்­கு­வதை யாராலும் நிறுத்­த­மு­டி­ய­ாது. அவ்­வாறு மருத்­துவ கற்­கை­களை கற்று பட்டம் பெற்­ற­வர்­களை பதிவு செய்­வது குறித்த தீர்­மா­னத்­தினை அமைச்சர் தனது தனிப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு அமை­வாக மேற்­கொள்ள முடியும்.

தற்­போ­தைய அர­சாங்கம் ஜன­நா­யக நடை­மு­றை­க­ளுக்கு அமை­வாக சுமுக­மான தீர்­வொன்றை பெறு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றது. அவ்­வா­றி­ருக்­கையில் தான் இவ்­வா­றான எதிர்ப்­புக்கள் வெளியி­டப்­ப­டு­கின்­றன. நான் சுகா­தார அமைச்­ச­ராக இருந்­தி­ருப்­பே­னானால் இப்­போது பட்டம் பெற்ற மருத்­து­வர்கள் பதி­வு­செய்­யப்­பட்டு பணியில் ஈடு­பட ஆரம்­பித்­தி­ருப்­பார்கள்.

அத்­த­கைய  அதி­காரம் அமைச்­ச­ருக்கு உள்­ளது. அவ்­வா­றி­ருக்­கையில் அமைச்சர் ராஜித, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் இப்­பி­ரச்­சி­னையை சுமு­க­மாகத் தீர்ப்­ப­தற்கு முயற்சி செய்­கின்­றார்கள்.

இந்த நாட்டில் பணிப்­ப­கிஷ்­க­ரிப்பில் ஈடு­ப­ட­ மு­டி­யா­த­வர்­களில் பிரதானமான வர்களே வைத்­தி­யர்கள். அவர்கள்  ஏழு தினங்­களும் பணி­பு­ரிய வேண்­டி­யவர்கள். அவ்­வா­றான நிலையில் பணிப்­ப­கிஷ்­க­ரிப்பில் ஈடு­ப­டு­வார்­க­ளாயின் அவர்களை மக்கள் பார்த்­துக்­கொள்­வார்கள். அவர்­களின் தாயார்­க­ளையும், பிள்­ளை­க­ளையும், வீடு­க­ளையும் கூட மக்கள் பார்த்­துக்­கொள்­வார்கள். மூன்று நான்கு நாட்கள் பணிப்­ப­கிஷ்­க­ரிப்பில் ஈடுபடுவார்­க­ளாயின் அதன் விளைவை அவர்கள் அறிய முடியும்.

சைட்டம் மருத்­துவக் கல்­லூ­ரியை மூடு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. நான் அமைச்­ச­ராக இருக்­கும்­போதுதான் வர்த்­த­மானி அறி­வித்­தலை விடுத்து நிரு­வா­கத்­திற்­கான அதி­கா­ரத்­தினை வழங்­கினேன். இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து மருத்துவ கல்லூரிகளை இலங்கையில் நிறுவுவதற்கு முயற்சி களை எடுத்திருந்தேன். இருப்பினும் இதில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக அதில் தாமதம் ஏற்பட்டு விட்டது. இவ்வாறான மூன்று, நான்கு மருத்துவ கல்லூரிகள் நாட்டுக்கு அவசிய மானவையே என்றார்.

Leave a comment