கொழும்பு 13 – ஹெட்டியாவத்தை சந்தியில் இருந்து இப்பாவத்தை சந்திவரையிலான பாதையின் போக்குவரத்து நாளை முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் மட்டுப்படுத்தப்படும் என காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.நிலத்தடி நீர் குழாய் திருத்த பணிகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் படி நாளை இரவு 9 மணி தொடக்கம் 30ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை குறித்த பாதையின் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.
இதற்கமைய புறக்கோட்டையில் இருந்து – கொச்சிக்கடை ஊடாக மட்டக்குளி நோக்கி செல்லும் வாகனங்கள் ஹெட்டியாவத்தை சந்தியின் வலது பக்கமாக திரும்பி ஜோர்ஜ் ஆர் டி சில்வா மாவத்தை வழியாக பயணம் செய்து ப்ளுமென்டல் மாவத்தையினுடாக அளுத்மாவத்தைக்கு உள்நுழைய முடியும் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மட்டக்குளியில் இருந்து பயணிக்கும் வாகனங்கள் மாதம்பிடிய பாதை அல்லது சென் ஜேம்ஸ் மாவத்தை ஊடாக புளுமென்டல் வீதியை அடைந்து, ஹெட்டியாவத்தை சந்தியினூடாக பயணிக்கலாம் என காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கொட்டாஞ்சேனை – வாசல வீதியில் இருந்து பரமாநந்தா விகாரை வரையிலான வீதியின் நிலத்தடி நீர்குழாயின் திருத்தப்பணிகள் காரணமாகவே இவ்வாறு வாகனப்போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

