விமல்வீரவங்சவின் கட்சிக்குள் பிளவு?

223 0
தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க நேற்றைய தினம் தெரிவித்த கருத்து தொடர்பில் இன்று கூடவுள்ள கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.
கட்சியின் தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்திற்கு குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று அண்மையில் கூறி இருந்தார்.
இந்த கருத்து தொடர்பில் விமல்வீரவன்ச, பொது மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும் என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க நேற்று கருத்து வெளியிட்டிருந்தார்.
கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தைக் கூறி இருந்தார்.
விமல்வீரன்வின் இந்த கருத்து அவரது தனிப்பட்டக் கருத்தாகும்.
இது கட்சியின் கருத்தல்ல.
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலான இந்த கருத்து மிகவும் தவறானதாகும் என்பதோடு, ஜனநாயகத்துக்கும் விரோதமானது.
இது குறித்து விமல்வீரவன்ச பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும் பிரியசிறி விஜயநாயக்க குறிப்பிட்டிருந்தார்.
பியசிறி விஜேநாயக்கவின் இந்த கருத்து தொடர்பில் இன்றைய தினம் கூடவுள்ள கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் போது ஆராயப்படவுள்ளதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தகவல் வழங்கினார்.

Leave a comment