திவுலபிட்டிய, ஹேன்பிட்டிகெதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி தப்பிச் சென்று பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று வைத்தியசாலைக்கு சென்ற நீதவான் அவரை விசாரணை செய்த பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

