பஸ் விபத்தில் இரு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 12 பேர் வைத்தியசாலையில்

325 0

தம்புள்ளை நகரில் ஏற்பட்ட பஸ் விபத்தொன்றில் இரு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுராதபுரத்திலிருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பஸ் வண்டி ஒன்று போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி ஒன்றுடன் மோதியதன் காரணமாக குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் தனியார் பஸ் வண்டியில் பயணித்த அதிகமான பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பின்னால் சென்ற தனியார் பஸ் வண்டி போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியை முந்திச்செல்ல முற்பட்ட வேளையில் அதன் பின் பகுதியில் மோதியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாராயினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் நிலைமை பாரதூரமில்லை என வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பில் குறித்த இரு பஸ் வண்டிகளினதும் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment