ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி இன்று விசாரணையை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அலுவலகம் எழிலகத்தில் உள்ள பசுமை தீர்ப்பாய அலுவலகத்தின் முதல் மாடியில் அமைக்கப்பட்டுள்ளது.விசாரணை கமிஷன் நீதிபதி ஆறுமுகசாமி இன்று விசாரணையை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்காக இன்று காலையில் அவரது அலுவலகம் முன்பு ஏராளமான பத்திரிகையாளர்கள் குவிந்திருந்தனர். ஆனால் 12.30 மணி வரை நீதிபதி ஆறுமுகசாமி அங்கு வரவில்லை. பொதுமக்களும் அங்கு இன்று வரவில்லை. எனவே விசாரணையை தொடங்குவது காலதாமதம் ஆகும் என்று தெரிகிறது.

