வட மாகாணத்தில் சில பகுதிகளில் புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்பட வேண்டும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவாநந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
நுவரெலியவில் புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்படவுள்ள நிலையிலேயே அவரால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் டக்ளஸ் தேவாநந்தா கடிங்களை அனுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மருதங்கேணி, கிளிநொச்சியில் கண்டாவளை, முல்லைத்தீவில் ஒட்டுச்சுட்டான், மன்னாரில் மடு ஆகிய இடங்களில் புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்படவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இதேவேளை வவுனியா மற்றும் திருகோணமலை நகரசபைகள், மாநகர சபைகளாக தரம் உயர்த்தப்படவேண்டும்.
செங்கலடி, களுவாஞ்சிக்குடி, கிண்ணியா. மூதூர் ஆகிய இடங்களில் நகரசபைகள் அமைக்கப்படல் வேண்டும்.
இதேவேளை, வாழைச்சேனையின் கோரளைப்பற்று மத்தி மற்றும் கோரளைப்பற்று பிரதேச செயலகங்களுக்கு கீழ் பிரதேசபைகள் அமைக்கப்படாதமையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவாநந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

