ஊடகங்களை சாடும் விக்னேஸ்வரன்

1047 0

ஊடகங்களில் தற்போது பேசப்படுகின்ற தமிழ் மொழியை எவ்வாறு வர்ணிப்பதென்று புரியவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முன்னர் ஊடகங்களில் பேசப்படுகின்ற தமிழ் இலக்கியநடை நிறைந்ததாக முறையான உச்சரிப்புடன் கூடியதாக அமைந்திருந்தாக அவர் கூட்டிக்காட்டியுள்ளார்.

இன்று இடம்பெற்ற ‘கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா  இல் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு லகர, ளகர, ழகர மற்றும் னகர, நகர, ணகர வேறுபாடுகள் தெரிவதில்லை.

ஆரம்ப வகுப்புக்களிலேயே பாடங்களை முறையாக எழுத்துக் கூட்டி வாசிப்பதால் எழுத்துப் பிழைகளற்ற சொல் வடிவங்களில் பரீட்சயப்பட முடிகின்றது.

புதிய புதிய விடயங்களை தேடிப் படிப்பதுடன், நல்ல நூல்களை பெற்று வாசிப்புப் பழக்கத்தை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a comment