ஜோன்ஸ்டனுக்கு எதிராக FCID செல்ல மஹிந்த தயார்

385 0

பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வியாபார அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற 300 கோடி ரூபா நிதி ஊழல் தொடர்பில் நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு செல்ல தான் தயாராக இருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தங்காலை பிரதேசத்தில் இடம்பெற்ற ஹம்பாந்தோட்டை மாவட்ட சுதந்திர கட்சி வலுப்படுத்தல் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தமக்கு சேறு பூசும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அது பற்றி தமக்கு பிரச்சினை இல்லை எனவும் அவர் பற்றி பேசுவதாயின் தனக்கு பல மணித்தியாலங்கள் தேவைப்படும் எனவும் இவர்கள் வெளியே மக்களிடத்தில் ஏசி விட்டு உள்ளே சுமுகமாக நடந்து கொள்வதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறித்த கூட்டத்தில் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment