யால வனவிலங்கு பூங்கா ஜீப் வண்டி உரிமையாளர்கள் போராட்டம்

301 0
யால வனவிலங்கு பூங்கா பிரதேசத்தில் சுற்றுலா போக்குவரத்து சேவைகளை வழங்கும் ஜீப் வண்டி உரிமையாளர்கள் தற்போது பூங்காவின் பிரதான நுழைவாயிலில் அருகில் போராட்டத்தை ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 300யிற்கும் ஷபாரி ஜீப் உரிமையாளர்கள் தமது வாகனத்துடன் வந்து இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பூங்காவிற்குள் ஜீப் வண்டிகளுக்கு உள்நுழைவது மட்டுப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் முதலாம் திகதியில் இருந்து மூடப்பட்டிருந்த யால வனவிலங்கு சரணாலயம் இன்று மீண்டும் திறக்கப்படமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தங்களுக்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் பேச்சு வார்த்தைக்கு முன்வருமாறு நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு ஜீவராசிகள் அமைச்சு ஆர்ப்பாட்ட காரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் அமைச்சர் செயலாளர் ஆர்.எம்.டி.பீ மீகஸ்முல்லவை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

Leave a comment