புதிய அரசியலமைப்புக்கு நான் ஒப்பமிட மாட்டேன்- சபாநாயகர் கரு

264 0

நாட்டை பிரிக்கும், நாட்டை துண்டாடும், பௌத்த மதத்துக்கு அல்லது வேறு சமயங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்த எந்தவொரு அரசியலமைப்பும் சட்ட மாக்கப்படுவதற்கு தேவையான சபாநாயகர் ஒப்பத்தை தான் ஒரு போதும் இடமாட்டேன் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (22) மீரிகம தேவமாதா தேவாலயத்தில் இடம்பெற்ற நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் சபாநாயகர் இதனைக் கூறியுள்ளார்.

நான் பாராளுமன்றத்தில் சபாநாயகராக உள்ளேன். இதுவரை புதிய அரசியல் யாப்பைக் கண்டதில்லை. அப்படியொன்றை அறியவும் இல்லை. எந்வொருவருக்கும் யோசனைகளை முன்வைக்க முடியும். பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் முடியும். சிலபோது இந்த யோசனைகள் நாட்டைப் பிரிக்கும், நாட்டைத் துண்டாடும் யோசனைகளாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அது அரசியலமைப்பாக ஏற்றுக் கொள்ளப்படுவது சபாநாயகரின் இறுதி ஒப்பத்தின் பின்னரேயாகும் எனவும் சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment