நல்லாட்சியிலும் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதாகவும், முஸ்லிம் சமூகத்தினர் தொடர்ச்சியாக தூசிக்கப்பட்டு, கொச்சைப்படுத்தப்பட்டு வருவதாகவும் ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் பாப்லோ டீ கிரீப்பிடம் அமைச்சர் றிசாட் பதியுதீன் முறையிட்டுள்ளார்.
மேலும், முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இத்தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவதற்கு ஐநா காத்திரமான பணிகளை முன்னெடுக்கவேண்டுமெனவும், இன ஐக்கியம் வலுப்பெற உதவ வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன், முஸ்லிம்கள் இந்த அரசாங்கத்தின் நடவடிக்கையினால் கவலையடைவதாகவும், போர்க்கால இழப்பீடுகள் இம்மக்களுக்கு வழங்கப்படவில்லையெனவும் குறிப்பிட்ட அவர், முஸ்லிம் மக்கள் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லையெனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், புதிய அரசியலமைப்பில் முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர், முஸ்லிம் சமூகத்தின் இனவிகிதாசாரத்திற்கேற்ப அவர்களுக்கு உரிய இடம் வழங்கப்படவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

