சர்வதேச விசாரணையைக் கோரிய முதல் தலைவர் தானென விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது – சிவாஜிலிங்கம்!

464 0

சர்வதேச விசாரணையை முதன் முதலில் வலியுறுத்திய தமிழ்த் தலைவர் தான் என விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதாக, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னைத் தானே ஜனாதிபதி வேட்பாளராகப் பிரகடனப்படுத்திக்கொண்டிருக்கும் சிவாஜிலிங்கம் அவர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெருங்கிய உறவினரும், பகிரங்கமாக சொல்லக்கூடிய ஒருவரும் நடுநிலையானவருமான சிவாஜிலிங்கம், ‘சர்வதேச விசாரணை தேவை, போர்க்குற்றங்களுக்குவிசாரணைதேவை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும் நிவாரணமும் கிடைக்கவேண்டும் என கோரி வருகின்றார் என விக்கிலீக்ஸ் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் நாள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் தொடர்பாக நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக 19 அமைப்புக்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது அரசாங்கத்துக்கு மிகப் பெரிய அழுத்தத்தைக் கொடுத்திருக்கின்றது.

போராட்டங்களும், பேச்சுவார்த்தைகளும் சமாந்தரமாக நடைபெறவேண்டும். பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லாது பிரச்சனைகளைத் தீர்க்கமுடியாது.

பேச்சுவர்த்தையின்போது இரண்டொரு தினங்களில் சாதகமான பதில் தரப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. இருப்பினும் ஒரு வாரகாலம் பொறுத்து ப் பார்த்துவிட்டு எமது அடுத்த கட்டப் போராட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a comment