உத்தேச புதிய அரசமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மகிந்த அணியினர் நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என்று மகிந்த அணியினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அரசமைப்புக்கு எதிராக மக்களுக்குத் தெளிவூட்டும் கருத்தரங்குகளை நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளனர் எனத் தெரியவருகிறது.

