யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பாரிசவாத சிகிச்சை நிலையக்கூடம் அமைக்கப்படவுள்ளது.
700 மில்லியன் ரூபா செலவில் 6 அடுக்கு மாடிகளைக் கொண்டு இதற்கான கட்டடம் அமைக்கப்படவுள்ளது என்று போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
வடக்கு மாகாணத்தின் ஒரேயொரு போதனா வைந்தியசாலையாகத் திகழும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கூட பக்கவாதங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கான நவீன சிகிச்சைக்கூடம் இல்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனால் போதனா வைத்தியசாலை வளாகத்தில் 700 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகள் கொண்ட புதிய பாரிசவாத சிகிச்சை நிலையக் கூடம் ஒன்று 6 அடுக்கு மாடிக் கட்டடமாக அடுத்த ஆண்டு நிர்மாணிக்கப்படவுள்ளது.
அதில் இரண்டு அடுக்கு மாடிகளில் பாரிசவாத நோயாளிகளுக்கான விடுதி வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
ஒருமாடியில் அதற்கான வசதி வாய்ப்புக்கள் பயிற்சிக் கூடங்களும் அமையும், எஞ்சிய 3 மாடிகளில் ஏனைய விடுதிக ளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த திட்டமானது 2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு அவற்றின் பணிகள் இடம்பெறும். பணிகள் நிறை வடைந்ததன் பின் குறித்த விடுதி 2020ஆம் ஆண்டிலிருந்து இயங்கும் என்றார்.

