சமூக விடு­த­லைக்­காக சிலுவை சுமந்த நாம் சரீர விடு­த­லைக்­கா­கப் போரா­டும் நிலைமை!

241 0

சமூக விடு­த­லைக்­காக சிலுவை சுமந்த நாம், இன்று சரீர விடு­த­லைக்­கா­கப் போரா­டும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

எம்­ம­வர் சாத­னை­க­ளைச் சாலை­யேற்­றிக் கதி­ரை­யே­றிய கதா­பாத்­தி­ரங்­கள் கண்­மூ­டிச் செயற்­ப­டும் இவ்­வே­ளை­யில் கல்­விப் புலத்­தைக் கொண்டு பல்­க­லைக் கழக சமூ­கம் கண்­கூர வேண்­டும். இவ்­வாறு சிறை­க­ளில் அடைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக்கழக கல்­விச் சமூ­கத்­துக்கு முக­வ­ரி­யிட்டு அவர்­கள் அனுப்­பி­யுள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்­ள­னர்.

அதில் உள்­ள­தா­வது-;

அவ­ச­ர­கா­லச் சட்­டம் மற்­றும் பயங்­க­ர­வா­தச் சட்­டம் என்­பவற்­றால் கைது செய்­யப்­பட்டு இலங்­கை­யின் பல்­வேறு சிறைக் கூடங்­க­ளி­லும் நெடுங்­கா­ல­மா­கத் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளான நாம் யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழகச் சமூ­கத்­துக்கு அன்­பு­ரி­மை­யு­டன் வேண்­டு­கோள் ஒன்றை முன்­வைக்கின்றோம்.

அன்­று­மு­தல் இன்­று­வரை தமி­ழ­ரின் வாழ்­வு­ரி­மைப் போராட்­டங்­க­ளில் வரை­ய­றுத்­துக் கூற­மு­டி­யாத பெரும் வகி­பா­கத்தை வழங்­கும் பல்­க­லைக்கழ­கச் சமூ­கத்­தி­ன­தும், சிவில் சமூ­கங்களின தும் கால­ம­றிந்த செயற்­பா­டு­களே முள்­ளி­வாய்க்­காலுக்குப் பின்­ன­ரான தமி­ழர்­க­ளின் முது­கெ­லும்­பாக இருக்­கின்­றன.

அதைக் கண்டே இலங்கை ஆட்­சி­யா­ளர்களும், தமி­ழி­னத்­தின் வாக்கு வேட்­டை­யா­டி­க­ளும் தமிழ் மக்­க­ளுக்­குச் சில­தை­யே­ னும் செய்­யத் தலைப்­ப­டு­கின்­ற­னர்.

அர­சி­ய­லுக்கு அப்­பா­லான அகிம்­சைக் குரல்­களை அவ்­வ­ளவு இல­கு­வில் யாரா­லும் அடக்கி விடவோ, அலட்­சி­யப்­ப­டுத்தி விடவோ முடி­யாது என்ற உண்­மை­யின் அடிப்­ப­டை­யில் எங்­கள் விடு­த­லைக்­காக தடுப்­புச் சிறை­ க­ளில் இருந்து தாகம் கொள்­கின்­றோம்.

சிறைக் கூடங்­க­ளில் 130 பேர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளோம். எமது நெடுங்­கா­லச் சிறை­யி­ருப்பு எமது குடும்­பத்­தி­ன­தும், பிள்­ளை­ க­ளி­ன­தும் அன்­றா­டத்தை அழிவு நிலைக்­குத் தள்­ளிப் பல ஆண்­டு­க­ளா­கின்­றன.

சமூக, பொரு­ளா­தார, கலா­சா­ரப் பிரச்­சி­னை­கள் அவர்­க­ளைச் சீர­ழித்­துக் கொண்­டி­ருக்­கின்­றன. உற­வு­க­ளின் எல்­லை­யற்ற பிரிவு மனங்­களை உருக்­கு­லை­யச் செய்­துள்­ளது.

தமி­ழ­ரின் அர­சி­யல் விடு­த­லைக்­கான ‘போராட்­டத்­து­டன் தொடர்­பு­பட்­ட­வர்­கள்’ என்ற கார­ணத்­தைக் காட்டி சிறை­வைக்­கப்­பட்­டி­ருக்­கும் நாம் ‘போர்க் கைதி­கள்’ அல்­லது ‘அர­சி­யல் கைதி­கள்’ என்­ப­தில் இரு­வேறு கருத்­துக்­கள் இருக்க முடி­யாது.

போர் முடிந்து 8 ஆண்­டு­கள் கடந்­துள்ள நிலை­யில் அரசு நல்­லி­ணக்க அடிப்­ப­டை­யில் அர­சி­யல் தீர்­மா­னம் ஒன்றை எடுத்து, அனைத்­துத் தமிழ் அர­சி­யல் கைதி­க­ளை­யும் ஒரு பொறி­முறை ஊடாக விடு­விக்க வேண்­டும் என்­பதே எமது வேண்­டு­கோள்.

எமது இந்த நியா­ய­மான கோரிக்­கை­யைப் பலப்­ப­டுத்தி பல்­க­லைக்கழக சமூ­கத்­தி­னர் அனை­வ­ரும் ஓர­ணி­யில் நின்று குரல் உயர்த்தி எமது விடு­த­லையை வலுப்­ப­டுத்த வேண்­டும் என்று விந­ய­ மு­டன் கோரு­கின்­றோம்.- என்­றுள்­ளது.

Leave a comment