அமெரிக்க வைத்திய குழுவை வடக்கிற்கு அனுப்புவது விதிமுறைகளை மீறும் செயல்

58 0

imagesபுனர்வாழ்வுப் பெற்ற முன்னாள் விடுதலைப்புலி போராளிகளுக்கு விஷஊசி போடப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் பரிசோதனை செய்ய அமெரிக்க வைத்திய குழுவை வடக்கிற்கு செல்ல அனுமதிப்பதானது இலங்கையின் நெறிமுறைகள் மற்றும் விதிகளை மீறும் செயலென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு விடயங்களில் அனுமதியில்லாமல் மற்றுமொரு நாட்டு வைத்திய குழு தலையிடுவதற்கு இடமளிக்கக் கூடாது என அந்த சங்கத்தின் செயலாளர் கலாநிதி சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சானது வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க வைத்தியர் குழு தொடர்பான விடயங்களை உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.