ஊழல் அற்ற இலங்கையை உருவாக்குவோம் என்று உறுதியளித்து இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் நல்லாட்சி அரசாங்கம், அதன் ஆட்சியில் வெளிவரும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து வெட்கித் தலைகுனிய வேண்டும்” என்று, சமூக முன்னேற்ற, நலன்புரித் துறை மற்றும் கண்டி பாராம்பரியத் துறை அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், பிணைமுறி விவகாரத்துக்கும், பணப் பரிமாற்றல் மோசடிக்கும் இடையில் ஏதேனும் தொடர்புகள் இருக்கலாம் என்றும் ஊகம் தெரிவித்துள்ளார்.
இவை இரண்டும், நல்லாட்சி அரசாங்கத்தில் இதுவரை வெளிவந்திருக்கும் மிகப் பெரிய ஊழல்கள் என்று கூறியுள்ள அமைச்சர், இதுபோன்ற குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகளுக்குப் போதுமான தண்டனை வழங்கப்படுவதில்லை என்றும் கூறியுள்ளார்.

