மக்களை கடனிலிருந்து விடுவிக்க ஆலோசனை அமுல்படுத்தப்படும் – ஜனாதிபதி

353 0

மக்களை கடன் அழுத்தங்களில் இருந்து விடுவிப்பதற்கான ஆலோசனை 2018 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட பிரேரணையில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

தனியார் நிதி நிறுவனங்களிலிருந்து முறையற்ற விதத்தில் கடன்களைப் பெற்றுக்கொண்டதன் காரணமாக கிராம மக்கள் அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதிலிருந்து விடுவிப்பதற்கான நாடளாவிய செயற்திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாக்குவதற்கு வளங்களைப் பெற்றுக்கொடுக்கும் கொள்கையிலிருந்து விலகி,
பொருளாதார பிரச்சினைகளை உடைய மக்களை அதிலிருந்து மீட்டு அவர்களது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு தேவையான வசதிகளையும், வரப்பிரசாதங்களையும் வழங்குதல் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் எனவும் தெரிவித்தார்.

Leave a comment