சுதந்திரக் கட்சியில் இனவாதம் பேசுவோர் வெளியேற்றப்படுவர் – மஹிந்த அமரவீர

52 0

16-1444970253-mahinda-amaraweera234-600-720x480ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இனவாதம் பேசுவோர் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவர் என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு வரை தற்போதைய அரசை மாற்றுவதற்கு யாருக்கும் சந்தர்ப்பம் கிடைக்காது  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் படி அரசு கலைக்கப்பட்டு அதிகாரமானது நான்கரை வருடங்கள் கழி;த்தே ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் கையளிக்கப்பட்டது.

எனவே மிகவும் விரைவாக அரசை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பில் சிலர் பேசுவதற்கு அவர்களுக்கு அரசியலமைப்பு தொடர்பில் போதிய தெளிவின்மையே காரணம் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.