இருள் அகன்று ஒளி பிறக்கவேண்டும். தமிழ் மக்கள் அந்த ஒளியைத் தேடுகின்றனர். இருள் அகன்று ஒளி பிறக்கவேண்டும். தமிழ் மக்கள் அந்த ஒளியைத் தேடுகின்றனர்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தேசிய தீபாவளி தின நிகழ்வு அரச தலைவர் மாளிகையில் நேற்றிரவு நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே எதிர்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
தீபாவளி என்பதன் அர்த்தம், இருள் அகன்று ஒளி பிறக்க வேண்டும் என்பதாகும். தமிழ் மக்கள் இன்று அந்த ஒளியைத் தேடுகின்றனர். அடுத்த தீபாவளி அர்த்தமுடையதாக இருக்கவேண்டும்.
புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டது அல்ல. அது சந்திரிகா அம்மையாரின் காலத்தில் ஏன் அதற்கு முன்னர் இருந்தே முன்னெடுக்கப்பட்டது.
தற்போது நடைபெறும் புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி எந்தக் காரணத்துக்காகவும் தோற்கக் கூடாது. அது வெற்றிபெற வேண்டும். தமிழ் மக்களுக்கு அர்த்தமுள்ள தீர்வு கிடைக்கவேண்டும். என்றார்.

