சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

292 0

வடமாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

அவர்கள் இதன்போது தமது கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.

கடந்த யுத்த காலத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தற்பொழுது சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ் சிறைக்கைதிகள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சலுகைகள் வழங்குமாறு அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

அமைச்சர் சாகல ரத்னாயக, இராஜங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அண்மையில் ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த போது வடமாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியின் வாகனத்தை மறைத்து கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்போது அவர்களது குறைகளை கேட்டறிந்த ஜனாதிபதி தன்னை வந்து சந்திக்குமாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment